Sportsநெதர்லாந்தை வீழ்த்தியது ஆப்கான் - உலக கிண்ண தொடர் 2023

நெதர்லாந்தை வீழ்த்தியது ஆப்கான் – உலக கிண்ண தொடர் 2023

-

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (03) ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுபெடுப்பைத் தெரிவு செய்தது.

இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 46.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 58 ஓட்டங்களை சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் பெற்றதுடன் மேக்ஸ் ஓ’டவுட் 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில், 180 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், நெதர்லாந்து அணியின் சாகிப் சுல்பிகர் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

Latest news

பாண்ட் நாயகனுக்கு $100,000 நன்கொடை அளித்த அமெரிக்க கோடீஸ்வரர்

Bondi பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரை நிராயுதபாணியாக்கிய துணிச்சலான கடைக்காரருக்காக GoFundMe நிதியில் கிட்டத்தட்ட $300,000 திரட்டப்பட்டுள்ளது. மிகப்பெரிய பங்களிப்பை அமெரிக்க ஹெட்ஜ்...

Bondi கடற்கரையில் வாகனத்தில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விளக்கம்

Bondi கடற்கரையில் நடந்த கொடிய துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, துப்பாக்கி உரிமைச் சட்டங்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ்...

மிகப்பெரிய AI செயல்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரிய விண்கல் கண்டுபிடிப்பு

கர்டின் பல்கலைக்கழகத்தின் Desert Fireball Network-ஐ சேர்ந்த மாணவர்கள் குழு மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் ஒரு முஷ்டி...

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

ஆஸ்திரேலியாவில் கைதிகள், கைதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து ஐ.நா. தூதுக்குழு ஒன்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 நாள் பயணத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐ.நா....