தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்கள், மோசடி தொலைபேசி அழைப்புகளைத் தடுப்பதற்கான கூட்டுத் திட்டத்தில் இணைந்துள்ளன.
கால் ஸ்டாப் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முயற்சியில், ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மூலம் மோசடி அழைப்புகள் என அடையாளம் காணப்பட்ட எண்களும் மற்ற நிறுவனங்களால் தடுக்கப்படும்.
முதல் சில நாட்களில் மட்டும், இதுபோன்ற 1,300 அழைப்புகள் ஏற்கனவே தடுக்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய நுகர்வோர் ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, இந்த வருடத்தில் மாத்திரம் 92 மில்லியன் டொலர்களுக்கு மேல் இந்நாட்டு மக்கள் பல்வேறு மோசடி அழைப்புகளால் இழந்துள்ளனர்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான டாலர்களை மோசடி செய்பவர்களிடம் இருந்து சேமிக்க முடியும் என முக்கிய தகவல் தொடர்பு நிறுவனமான Optus சுட்டிக்காட்டியுள்ளது.