Sportsஅவுஸ்திரேலியாவிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து - உலக கிண்ண...

அவுஸ்திரேலியாவிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து – உலக கிண்ண தொடர் 2023

-

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இன்றைய உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 33 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களும் இழப்பிற்கு 286 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலியா சார்பில் அதிகப்பட்சமாக Marnus Labuschagne 71 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Chris Woakes 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

287 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 48.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களும் இழப்பிற்கு 253 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகப்பட்சமாக Ben Stokes 64 ஓட்டங்களையும், Dawid Malan 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பில் Adam Zampa 3 விக்கெட்டுக்களையும், Mitchell Starc, Josh Hazlewood, Pat Cummins மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Latest news

“ரஷ்யா – அமெரிக்கா” மீது கவனம் செலுத்தும் உலகம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சூசகமாக தெரிவித்துள்ளார். டிரம்பை சந்திக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறந்த இடம் என்று ரஷ்ய...

ஆஸ்திரேலிய வணிக வருமானம் – ஜூன் 2025 தரவு

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, ஜூன் 2025 இல் வணிக விற்றுமுதல் 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. கலை மற்றும் பொழுதுபோக்கு சேவைகள் துறை...

ஆஸ்திரேலியாவில் குறைந்து வரும் ஆதரவு சேவை மீதான நம்பிக்கை

வீட்டு மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான ஆலோசனை மற்றும் உதவிக்காக ஹாட்லைனுக்கு பெறப்பட்ட அழைப்புகளில் கிட்டத்தட்ட 60% பதிலளிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆலோசனை சேவை வழங்குநரான DVConnect,...

பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம்

விக்டோரியாவில் உள்ள MacKillop Education பள்ளி, பள்ளிக்குச் செல்லத் தயங்கும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. Bitter Sweet Café...

விக்டோரியாவில் 2026ம் ஆண்டில் நிறுத்தப்படும் எரிவாயு விநியோகம்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விக்டோரியாவில் உள்ள 10 கிராமப்புற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக Solstice...

டிஜிட்டல் பயணிகள் அட்டை முறையை அறிமுகப்படுத்தும் சிட்னி விமான நிலையம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிலையமான சிட்னி விமான நிலையம், சர்வதேச பயணிகளுக்காக digital incoming passenger card-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Qantas-உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் உள்வரும்...