SportsDLS முறையில் 21 ஓட்டங்களால் வென்றது பாகிஸ்தான் - உலக கிண்ண...

DLS முறையில் 21 ஓட்டங்களால் வென்றது பாகிஸ்தான் – உலக கிண்ண தொடர் 2023

-

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி DLS முறையில் 21 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பில் Rachin Ravindra, 108 ஓட்டங்களையும் Kane Williamson, 96 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Mohammad Wasim Jr, 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, 402 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்பிற்கு துடுப்பெடுத்து ஆடிக்கொண்டிருக்கும் வேளையில் மழை குறிக்கிட்டது.

தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. எனினும், DLS விதிகளின் படி பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் Fakhar Zaman 126 ஓட்டங்களையும், Babar Azam 66 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் Tim Southee 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

Latest news

அண்டார்டிகாவில் மற்றொரு திகிலூட்டும் கண்டுபிடிப்பு

அண்டார்டிகாவின் ஹெக்டோரியா பனிப்பாறை இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 50% உருகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வேகமான பின்வாங்கலாகும். சமீபத்திய ஆய்வின்படி, ஹெக்டோரியா பனிப்பாறை...

Streaming சேவை வழங்குநர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட சர்வதேச Streaming சேவை வழங்குநர்களுக்கு புதிய சட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய நுகர்வோரிடமிருந்து கிடைக்கும்...

குயின்ஸ்லாந்தில் நோய்வாய்ப்பட்டுள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள்

அரசாங்கத்துடனான மூன்று வருட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, குயின்ஸ்லாந்தில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஊதிய...

Knight ஆனார் Sir David Beckham

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் David Beckham-இற்கு Knight பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளுக்கான அவரது சேவைகளுக்காக நேற்று வின்ட்சர்...

குழந்தைகளுக்கு மேலும் 2 சமூக ஊடக தளங்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய சட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் 3.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் சுமார் 20% குடும்பங்கள் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வங்கியின் 2025 அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை...