உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று இரவு இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு சாதகமான முறையில் நடைபெறும் என நம்புவதாக பிரதமர் அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தடைகளை நீக்க சில இறுதி ஒப்பந்தங்கள் எட்டப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தடைகள் காரணமாக, சீனா மற்றும் அவுஸ்திரேலியா இடையே கிட்டத்தட்ட 02 பில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தக பரிவர்த்தனைகள் முடங்கியுள்ளன.
07 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியப் பிரதமர் ஒருவர் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.