Sportsஇலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ் - உலக கிண்ண தொடர் 2023

இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ் – உலக கிண்ண தொடர் 2023

-

இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையிலான இன்றைய உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்றது.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக சரித் அசலன்க 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இவர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும்.

பந்துவீச்சில், பங்களாதேஷ் அணியின் தன்சிம் ஹசன் சாகிப் 80 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ஷகிப் அல் ஹசன் 57 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்தநிலையில், 280 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில், அதிகபடியாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 90 ஓட்டங்களையும், ஷகிப் அல் ஹசன் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்க 69 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

நன்றி தமிழன்

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...