Sportsமேக்ஸ்வெல்லின் அசாத்திய இரட்டை சதத்துடன் அவுஸ்திரேலியா அபார வெற்றி - உலக...

மேக்ஸ்வெல்லின் அசாத்திய இரட்டை சதத்துடன் அவுஸ்திரேலியா அபார வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

உலக கிண்ண தொடரின் 39வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 291 ஓட்டங்களை எடுத்துள்ளது. சட்ரன் 129 ஒட்டத்துடனும், ரஷித் கான் 35 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, 292 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா அணி களமிறங்கியது.

டிராவிஸ் ஹெட் டக் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய மிட்செல் மார்ஷ் 24 ஓட்டத்துடன் வெளியேறினார். டேவிட் வார்னர் 18 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். ஜோஷ் இங்கிலிஸ் டக் அவுட்டானார். இதனால் அவுஸ்திரேலியா அணி 8.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 49 ஓட்டங்களை எடுத்து திணறியது.

லபுசேன் 14 ஓட்டத்துடனும், ஸ்டோய்னிஸ் 6 ஓட்டத்துடனும், மிட்செல் ஸ்டார்க் 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலியா 91 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டை இழந்து திணறியது.

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மேக்ஸ்வெல் அபாரமாக ஆடி சதமடித்தார். அவருக்கு அணி தலைவர் பாட் கம்மின்ஸ் ஒத்துழைப்பு கொடுத்தார்.

இறுதியில், அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 293 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 201 ஓட்டங்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

ஆப்கானிஸ்தானின் நவீன் உல் ஹக், ஓமர்சாய், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் திரும்பப் பெறப்படும் ஒரு பிரபலமான மதிய உணவுப் பொருள்

விக்டோரியா முழுவதும் உள்ள Coles கடைகளில் விற்கப்பட்ட ஒரு பிரபலமான மதிய உணவுப் பொருள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஒவ்வாமை என கூறப்படுகிறது. Coles Kitchen...

மீண்டும் மோசமடைந்து வரும் போப்பின் உடல்நிலை

புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போப் இன்னும் மூச்சு விடுவதில் சிரமப்படுவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. இதன் விளைவாக, அவருக்கு செயற்கையாக...

அடுத்த 2 ஆண்டுகளுக்கு பியர் வரி இல்லை – அல்பானீஸ் வாக்குறுதி

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தேர்தல் வாக்குறுதியாக பியர் வரியை நிறுத்தி வைக்க தயாராகி வருகிறார். நிலவும் பணவீக்கம் காரணமாக, ஆண்டுக்கு இரண்டு முறை பியர் மீது...

தனது சேவையை நிறுத்திய Skype

Skype ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய பிறகு அதன் வீடியோ அழைப்பு சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. Microsoft 2011 ஆம் ஆண்டு ஸ்கைப்பை 8.5 பில்லியன் டாலருக்கு...

தனது சேவையை நிறுத்திய Skype

Skype ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய பிறகு அதன் வீடியோ அழைப்பு சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. Microsoft 2011 ஆம் ஆண்டு ஸ்கைப்பை 8.5 பில்லியன் டாலருக்கு...

மனித மூளையை கொல்லும் டிஜிட்டல் திரை – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஒரு நாளைக்கு அதிக நேரம் டிஜிட்டல் திரைகளில் செலவிடுவது ஒரு நபரின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இது மூளையின் செயல்பாடு...