Breaking Newsநியூஸிலாந்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!

நியூஸிலாந்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!

-

தமிழகத்தின் தொன்மைத்துறை முகமாம் நாகப்பட்டினத்திற்கும் நியூஸிலாந்துக்கும் என்ன உறவு?

New Zeeland தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!

அதனை கைகளால் தொட்டுத் தூக்கிப் பார்க்க எமக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது அதுவும் கையுறை அணிந்து கொண்டு.

இந்த மணியின் வயது? 15ம் நூற்றுண்டுக்கும் 18ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பாய்மரக் கப்பல் புயலில் சிக்குண்டு அக்கப்பலின் சிதிலங்கள் கரை ஒதுங்கிய போது ஒரு மரத்தின் வேர்களுக்குள் சிக்குண்டிருந்த இந்த வெண்கலமணியைக் கண்டெடுத்த நியுஸிலாந்தின் ஆதிக்குடிகளான ‘மெளரி’ இனத்து மக்கள் இது என்னவென்று தெரியமால் உணவு தயாரிக்க இதனடியில் நெருப்பு மூட்டி உருளைக் கிழங்குகளை அவிப்பதற்குப் பயன்படுத்தி வந்தார்களாம்.

நீண்ட காலத்தின் பின்னர் 1899ம் ஆண்டு இதனைக் கண்டெடுத்த வரலாற்று ஆய்வாளர் திரு.William Colenso இந்த வரலாற்றுச் சின்னத்தை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பதற்கு நடவடிக்கையை எடுத்துள்ளார்.

166mm உயரமும், 155mm சுற்றளவும் கொண்ட இந்த மணியில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துகள் எந்த மொழிக்குரியவை? எந்த நாடு எனக் கண்டுபிடிப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியில் இது தமிழ்மொழி என்பதுவும் அந்த நாளில் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றான நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு வந்த கப்பலின் மணி என்பதுவும் தெரியவந்துள்ளது.

இந்த மணியில் இப்போதும் தெளிவாகத் தெரியும் வகையில் பொறிக்கப்பட்டுள்ள வரி-‘ முகைய்யத் தீன் பாகசுடைய கப்பல் மணி’ இஸ்லாமியராயினும் தம் தாய் மொழியாம் தமிழை தமது மொழி அடையாளமாய் மதிக்கும் ஒருவரது கப்பல் எனப்புரிந்தது. வாணிபத்தில் சிறந்து விளங்கிய நம் தொன்மைத் தமிழரின் அடையாளக் குறியீடாக தமிழ் எழுத்துகளைக் கண்ணுற்ற போது பெருமையால் நெஞ்சு நிமிர்ந்தது.

B.H.Abdul Hameed

Latest news

காஸாவில் இயல்பான திறனை இழந்துள்ள 21,000 சிறுவர்கள்

இஸ்ரேலின் தாக்குதலால் காஸா பகுதியில் சுமார் 21,000 சிறுவர்கள் இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை...

ரிசர்வ் வங்கியின் ரொக்க விகிதக் குறைப்பு குறித்த கருத்துகள்

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி செப்டம்பரில் மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்காது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை 0.25% குறைத்து...

முதல் முறையாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ள விக்டோரியன் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

ஒரு கொலைக் குற்றத்திற்கான முதல் நேரடி ஒளிபரப்பு அடுத்த திங்கட்கிழமை விக்டோரியா உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும். ஜூலை 2023 இல், 50 வயதான Erin Patterson, ஒரு...

உலகின் முதல் பளிங்கு ஆட்டுக்குட்டியை உற்பத்தி செய்துள்ள ஆஸ்திரேலியா

உலகின் முதல் பளிங்கு ஆட்டுக்குட்டியை (marbled meat) ஆஸ்திரேலியா தயாரித்துள்ளது. இது நியூ சவுத் வேல்ஸில் உள்ள விவசாயிகள் குழுவால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோகிராம்...

உலகின் முதல் பளிங்கு ஆட்டுக்குட்டியை உற்பத்தி செய்துள்ள ஆஸ்திரேலியா

உலகின் முதல் பளிங்கு ஆட்டுக்குட்டியை (marbled meat) ஆஸ்திரேலியா தயாரித்துள்ளது. இது நியூ சவுத் வேல்ஸில் உள்ள விவசாயிகள் குழுவால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோகிராம்...

Shopping-ஐ மேலும் எளிதாக்கும் Amazon Australia

வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் செய்வதை எளிதாக்குவதற்காக Amazon Afterpay-உடன் கூட்டு சேர்ந்துள்ளது. Buy Now, Pay Later சேவையைப் பயன்படுத்தி Amazon வலைத்தளம் மற்றும் செயலியில் பொருட்களை வாங்குவதை...