Newsஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட 30,000 க்ளூகர்களை திரும்பப் பெறும் Toyota

ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட 30,000 க்ளூகர்களை திரும்பப் பெறும் Toyota

-

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட 30,000 க்கும் மேற்பட்ட டொயோட்டா க்ளூகர் வாகனங்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.

பம்பர் கவர் தொடர்பான உற்பத்தி குறைபாடு காரணமாக 2021 மற்றும் 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் திரும்பப் பெறப்படுகின்றன.

(Kluger Hybrid AWD 2.5L, Kluger Petrol 2WD 2.4L, Kluger Petrol 2WD 3.5L, Kluger Petrol AWD 2.4L மற்றும் Kluger Petrol AWD 3.5L)

இதனால் வாகனம் இயங்கும் போது சம்பந்தப்பட்ட பகுதி கீழே விழும் அபாயத்துடன் வாகன விபத்தில் சிக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.

இது குறித்து டொயோட்டா நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட வாகன வகைகளை கொண்டவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டு, அது தொடர்பான குறைபாடுகளை இலவசமாக சரி செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1800 987 366 என்ற எண்ணில் டொயோட்டா அவசர அழைப்புத் துறையைத் தொடர்புகொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...