Breaking Newsதடுப்புக் காவலிலுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை விடுவிப்பது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என...

தடுப்புக் காவலிலுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை விடுவிப்பது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என குற்றச்சாட்டுகள்!

-

தடுப்புக் காவலில் உள்ள சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் குழுவை விடுவிப்பது பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூட்டாட்சி எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகிறது.

விடுவிக்கப்பட்டவர்களில் சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்களும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்களும் உள்ளடங்குவதாக குடிவரவு அமைச்சர் டான் டெஹான் வலியுறுத்துகிறார்.

கடந்த புதன்கிழமை அந்தோனி அல்பானீஸ் அரசாங்கம் தடுப்புக்காவலில் இருந்த 80 புலம்பெயர்ந்தோரை எந்தவித விசாரணையும் இன்றி விடுதலை செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டவிரோத குடியேற்றவாசிகளை காலவரையறையின்றி காவலில் வைப்பது சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய இந்த விடுதலை செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் ஆன்ட்ரூ கில்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறையும் எல்லைப் பாதுகாப்புப் படையும் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 340 பேர் எதிர்வரும் காலங்களில் அதிகாரிகளால் விடுவிக்கப்பட உள்ளனர்.

சராசரியாக, குடிவரவு கைதிகள் 708 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 124 புலம்பெயர்ந்தோர் தற்போது 05 வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய புகலிட மையம் அறிவித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...