நேஷனல்ஸ் தலைவர் டேவிட் லிட்டில்ப்ரூட், ஆஸ்திரேலியர்கள் குறைந்த மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விலையால் பயனடையவில்லையா என்பதை அவசரமாக விசாரிக்க நுகர்வோர் ஆணையத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த வகை இறைச்சிகளின் விலைகள் குறைந்துள்ளதாகவும், ஆனால் பல்பொருள் அங்காடிகள் தமது பொருட்களின் விலைகளை குறைக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே இறைச்சி தொடர்பான பொருட்களின் விலைகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி பல்பொருள் அங்காடிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தேசியக் கட்சியின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், மத்திய அரசு ஏற்கனவே இதேபோன்ற விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இறைச்சி விலை குறைக்கப்பட்டதன் பலனை மக்களுக்கு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் முர்ரே வாட் சமீபத்தில் பல்பொருள் அங்காடிகளிடம் கூறியிருந்தார்.