Newsஹமாஸ் பாராளுமன்ற கட்டிடத்தை கைபற்றினர் இஸ்ரேல் இராணுவம்

ஹமாஸ் பாராளுமன்ற கட்டிடத்தை கைபற்றினர் இஸ்ரேல் இராணுவம்

-

காசாவில் தரைவழியாக முன்னேறும் இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் பாராளுமன்ற கட்டிடத்தை நேற்று கைப்பற்றியது.

பலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி ஏவுகணை குண்டு வீச்சு தாக்குதலை நடத்தினர். அதன்பின் தரைவழியாகவும், வான் வழியாகவும், இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவிய ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலியர்கள் 1,200 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். 239 பேரை காசா பகுதிக்குள் கடத்திச் சென்றனர்.

இதனால் இஸ்ரேல் இராணுவம் காசாவின் வட பகுதியில் வான்வழித் தாக்குலில் ஈடுபட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த தாக்குதலில் காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் காசாவின் வட பகுதியில் சுமார் 15 இலட்சம் பேர் இடம் பெயர்ந்து காசாவின் தென் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

காசா எல்லையில் பீரங்கி வாகனங்களுடன் காத்திருந்த இஸ்ரேல் இராணுவம், காசாவின் வட பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஊடுருவியது. இஸ்ரேல் விமானப்படை ஹமாஸ் போராளிகளின் இருப்பிடங்களில் குண்டு மழை பொழிய, இஸ்ரேல் தரைப்படை படிப்படியாக முன்னேறி, ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கைப்பற்றி வந்தது.

காசாவின் மருத்துவமனைகளில் பதுங்கியிருந்த ஹமாஸ் போராளிகளையும் இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்கினர். காசாவில் உள்ள முக்கிய மருத்துவமனையான அல்-குத் மருத்துவமனைக்கு வெளியே ஏவுகணைகளுடன் பாதுகாப்பு பணியில் இருந்த ஹமாஸ் போராளிகள் 24 பேரை இஸ்ரேல் இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவுத் தலைவர் காமிஸ் தபாபாஸ், சீனியர் கமாண்டர் தஷின் மஸ்லாம் உட்பட ஹமாஸ் படையின் முக்கிய அதிகாரிகள் அனைவரையும் இஸ்ரேல் இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த நாடாளுமன்ற கட்டிடத்தையும், இஸ்ரேல் இராணுவத்தினர் கைப்பற்றி உள்ளே புகுந்தனர். காசாவின் வடபகுதியில் ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து முக்கிய பகுதிகளும் இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

காசா நகரத்தில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனையில் மின்சாரம், எரிபொருள், குடிநீர், அத்தியாவசிய மருந்துகள் என அனைத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நோயாளிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, எடை குறைந்த குழந்தைகளை காப்பாற்றுவதற்கு இன்குபேட்டர் வசதி மிகவும் அத்தியாவசியமானதாகும். ஆனால், மின்சாரம் இன்றி அவற்றின் செயல்பாடு முடங்கியுள்ளதால் குழந்தைகளை வெளியில் எடுத்து வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, மனித உயிர்கள் கொத்து கொத்தாக செத்து மடிவதால் 7 குழந்தைகள் உட்பட 179 சடலங்கள் ஒரே இடத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டன.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...