இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடி குறித்து விவாதிக்க தேசிய அமைச்சரவைக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன், பிரதமர் அந்தோனி அல்பனீஸிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொழிற்கட்சி அரசாங்கத்துக்குள்ளும், அரச தலைவர்கள் மத்தியிலும் இது குறித்து முரண்பட்ட கருத்தியல்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வாழும் யூத வம்சாவளியினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரைக் கேட்டுக்கொள்கிறார்.
உலகின் அனைத்து முக்கிய நாடுகளும் இந்த நெருக்கடி தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும், ஆஸ்திரேலிய மத்திய அரசின் கருத்து தெளிவாக இல்லை என்று பீட்டர் டட்டன் வலியுறுத்துகிறார்.
பாலஸ்தீனத்தின் மீது பாரிய தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் அச்சுறுத்திய சில மணி நேரங்களிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.