ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் அக்டோபர் மாதத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது.
இதன்படி, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், 0.2 சதவீதம் அதிகரித்து 3.7 சதவீதமாக உள்ளது.
கடந்த மாதம், 55,000 பேருக்கு புதிய வேலை கிடைத்துள்ளது, ஆனால் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 28,000 ஆக அதிகரித்துள்ளது என்று புள்ளியியல் பணியகம் இன்று வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.
இதனால், இந்த நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த ஜூலை மாதம் இருந்த அதே நிலைக்குத் திரும்பியுள்ளது.
அக்டோபர் மாதத்தில் வேலை நேரமும் 0.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.