Cinemaஎலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் திட்டம்

எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் திட்டம்

-

சமீபகாலமாக வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. திரைப்பட நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், இசை, நடன கலைஞர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை திரைப்படமாக்கப்படுகிறது.

அந்த வரிசையில் உலக பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் வாழ்க்கையும் திரைப்படமாக்கப்படவுள்ளது.

‘டெஸ்லா’ நிறுவனத்தின் அதிபரான இவர் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி அதில் பல மாற்றங்களை செய்ததன் மூலம் உலகம் முழுதும் பிரபலமானார்.

தென் ஆப்பிரிக்காவில் சாதாரண குடும்பத்தில் பிறந்த எலான் மஸ்க் வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சினைகள், அவர் செல்வந்தராக உயர்ந்தது, இன்னும் சொல்லப்படாத பல விஷயங்கள் இந்த படத்தில் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வாழ்க்கை படத்தை பிளாக் ஸ்வான், பை, தி வேல் போன்ற ஹாலிவுட் படங்களை இயக்கிய டாரென் ஆர் நோப்ஸ்கி இயக்குகிறார்.

ஏ24 என்ற நிறுவனம் தயாரிக்கிறது. தனது வாழ்க்கையை படமாக்க எலான் மஸ்க் ஒப்புக் கொண்டு விட்டதாகவும், அவர் கேரக்டரில் நடிப்பவரின் தேர்வு நடந்து வருகிறதெனவும் தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒவ்வாமை விகிதங்கள்

ஆஸ்திரேலியர்களில் மூன்றில் ஒருவர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் $18.9 பில்லியன் நிதி இழப்புகளையும், $44.6 பில்லியன் நிதி சாராத தாக்கங்களையும் சந்திக்கின்றனர் என்று ஒரு...

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட சமீபத்திய அமைப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, ஸ்வீடன், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல...

அதிகரித்து வரும் பணவீக்கம் வட்டி விகிதக் குறைப்புகளைப் பாதிக்குமா?

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் (ABS) மாதாந்திர புள்ளிவிவரங்களின்படி, ஜூலை மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்ந்தது, நுகர்வோர் விலைகள் ஆண்டுதோறும் 2.8 சதவீதம் உயர்ந்தன. ஜூன் மாதத்தில் நுகர்வோர்...

நியூசிலாந்து அறிமுகப்படுத்திய புதிய விசா

நியூசிலாந்து அரசாங்கம் தொழில்முனைவோர் பணி விசாவை ஒழித்துவிட்டு வணிக முதலீட்டாளர் விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. நியூசிலாந்தின் பொருளாதாரத்தை வளர்க்க உதவும் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம்...

அமெரிக்காவில் ஒரு பள்ளியில் துப்பாக்கிச்சூடு – இரு குழந்தைகள் பலி – 17 பேர் காயம்

அமெரிக்காவின் Minneapolis மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியின் தேவாலய வழிபாட்டில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். கோடை...

நியூசிலாந்து அறிமுகப்படுத்திய புதிய விசா

நியூசிலாந்து அரசாங்கம் தொழில்முனைவோர் பணி விசாவை ஒழித்துவிட்டு வணிக முதலீட்டாளர் விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. நியூசிலாந்தின் பொருளாதாரத்தை வளர்க்க உதவும் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம்...