Newsபென்சில் சேகரித்து புதிய கின்னஸ் சாதனை படைத்த நபர்

பென்சில் சேகரித்து புதிய கின்னஸ் சாதனை படைத்த நபர்

-

அமெரிக்காவின் அயோவா மாநில ஜாஸ்பர் கவுன்டி பகுதியில் உள்ள கோல்ஃபாக்ஸ் நகரத்தில்வசிப்பவரான ஆரோன் பார்த்தலோமி, சிறு வயதில் தனது தாத்தாவுடன் கடைகளுக்கு செல்லும் போது பென்சில்கள் மீது ஆர்வம் ஏற்பட்டு அந்த வயது முதலே சேகரிக்க தொடங்கிய அவருக்கு நாட்கள் செல்ல செல்ல பொழுதுபோக்காக மாறியுள்ளது. இவரிடம் பல நிறங்களில் பல வடிவங்களில் ஏராளமான பென்சில்கள் உள்ளன.

உலகெங்கும் நடைபெறும் அரிதான சாதனைகளை பதிவு செய்யும் நிறுவனமான கின்னஸ் உலக சாதனை பதிவகத்தின் பதிவுகளின்படி அதிக பென்சில் சேகரித்த சாதனை எண்ணிக்கை 24,000 என இருந்துள்ளது.

இதை கேள்விப்பட்ட ஆரோன் தனது சேகரிப்பை பார்க்க வருமாறு அமெரிக்க பென்சில் சேகரிப்பாளர்கள் சங்கத்திற்கு அழைப்பு விடுத்ததில் கடந்த ஜூலை மாதம், அவர்கள் கணக்கெடுப்பை துவங்கினர். அவர்களிடம் பெற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் கின்னஸ் நிறுவனத்திற்கு ஆரோன் தனது சேகரிப்பு குறித்த விபரங்களை அனுப்பியுள்ளார்.

3 மாதங்களுக்கு பிறகு கின்னஸ் நிறுவனத்தால் ஆரோனுக்கு உலகிலேயே அதிக பென்சில்கள் சேகரித்து கின்னஸ் சாதனை புரிந்தவர் எனும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஆரோனிடம் 69,255 பென்சில்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 100-வருட பென்சில் ஒன்றும் அடங்கும்.

“எண்ணிக்கையின்படி பழைய சாதனையான 24 ஆயிரத்தை விட எனது சேகரிப்புகள் அதிகம் என அறிந்திருந்தேன். ஆனால், அதை துல்லியமாக எண்ண நீண்ட காலமும், பொறுமையும் தேவைப்பட்டது. நீண்ட பணிக்கு பிறகு இது நடைபெற்றது. கின்னஸ் நிறுவனத்தினர் கடுமையான விதிமுறைகளை பின்பற்றினார்கள். என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், இறுதியில் அனைத்தும் நல்லபடியாக முடிந்தது” என ஆரோன் தனது சாதனை குறித்து அறிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...