போராட்டத்தின் போது வாகன பேரணிகளை தடை செய்ய வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலியன் லீசரால் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அவசர நடவடிக்கையை எடுக்குமாறு நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் கிறிஸ் மின்னிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒவ்வொரு வார இறுதியிலும் சிட்னியில் நடத்தப்படும் பலஸ்தீன மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான போராட்டங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளமையே இதற்கான காரணம் என எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கு சிட்னியில் இன்று பாலஸ்தீன ஆதரவு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.