Newsஉலக பிரபஞ்ச அழகியாக நிகரகுவா அழகி தெரிவு

உலக பிரபஞ்ச அழகியாக நிகரகுவா அழகி தெரிவு

-

எல் சல்வடார் நாட்டில் இடம்பெற்ற 72வது உலக பிரபஞ்ச அழகிப்போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90 பெண்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ஸ்வேதா ஷர்தா (வயது 23) பங்கேற்றார். இவர் இந்த ஆண்டுக்கான மிஸ் திவா யுனிவர்ஸ் பட்டத்தை வென்றவர். தனிப்பட்ட உரைகள், நேர்காணல்கள் மற்றும் ஆடை அலங்காரங்கள் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

பிரபஞ்ச அழகிப்போட்டியின் இறுதிச்சுற்று எல் சால்வடோர் தலைநகர் சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்போ பினெடா அரங்கில் நடந்தது. இதில் முதல் 20 பேரில் இந்திய அழகி இடம் பெற்றார். ஆனால் இறுதி 5 பேரில் அவர் தேர்வாகவில்லை.

நிகரகுவா, தாய்லாந்து, அவுஸ்திரேலியா, கொலம்பியா, போர்ட்டோரிகோ ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இடம்பெற்றனர். அவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்ட பிறகு பட்டத்துக்காக இறுதிச் சுற்றுக்கு நிகரகுவா, தாய்லாந்து, அவுஸ்திரேலியா அழகிகள் நுழைந்தனர். இறுதிச் சுற்றில் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

அதன் பின் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார். இதில் உலக பிரபஞ்ச அழகியாக நிகரகுவா நாட்டை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

ஷெய்னிஸ் பலாசியோசுக்கு 2022-ம் ஆண்டு உலக பிரபஞ்ச அழகியாக அமெரிக்காவின் போனிகேப்ரீயல் கிரீடத்தை சூட்டினார். பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் நிகரகுவா பெண் என்ற சிறப்பை ஷெய்னிஸ் பெற்றார்.

இறுதிச் சுற்றில் ஷெய்னிஸிடம் நீங்கள் மற்றொரு பெண்ணாக ஒரு வருடம் வாழ முடிந்தால் யாரை தேர்வு செய்வீர்கள்? என்ன காரணம் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் 18-ம் நூற்றாண்டின் இங்கிலாந்து தத்துவாஞானியும் பெண்ணியவாதியுமான மேரி வோல்ஸ் போன்கிராப்டாக வாழ விரும்புவதாக தெரிவித்தார். அவர் எல்லைகளை உடைத்து பல பெண்களுக்கு வாய்ப்பளித்தார். இன்று பெண்களுக்கு எந்த வரம்புகளும் இல்லை என்று ஷெய்னிஸ் கூறினார்.

2-வது இடத்தை தாய்லாந்து அன்டோனியா போர்சில்ட்டும், 3-வது இடத்தை அவுஸ்திரேலியாவின் மொராயா வில்சனும் பிடித்தனர்.

பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ள 23 வயதான ஷெய்னிஸ், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் மோடல் ஆவார்.

நன்றி தமிழன்

Latest news

மசாஜ் சலூனில் விசித்திரமாக நடந்து கொண்ட ஒருவர் பணிநீக்கம்

குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...

போலி ரேபிஸ் தடுப்பூசிகள் பற்றி எச்சரிக்கை

Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த...

சட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேறினால் சன்மானம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...

Bondi பயங்கரவாதத் தாக்குதலின் நாயகர்களைத் தேடி சிறப்பு கௌரவ விருதுகள்

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மாவீரர்களுக்கு சிறப்பு மரியாதைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்தார். நேற்று காலை கான்பெராவில் ஊடகங்களுக்குப் பேசிய அல்பானீஸ், புதிய சிறப்பு...

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன்...

விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் கடைகள் திறக்கும் நேரம்

நீங்கள் பொருட்கள் வாங்க வேண்டிய இடங்கள், அடுத்த சில நாட்களில் திறந்திருக்கும் திகதிகள் மற்றும் நேரங்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துள்ளோம். கிறிஸ்துமஸ் தினம், Boxing தினம் மற்றும்...