பல்கலைக்கழக வளாகங்களில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய சாசனத்தில் கையெழுத்திட ஆஸ்திரேலிய பல்கலைக்கழக அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், 2017 ஆம் ஆண்டு முன்னர் வழங்கப்பட்ட அதே வாக்குறுதிகள் புதிய சாசனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதிய சாசனத்தின் கீழ், பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட வன்முறைச் செயல்களைத் தீர்ப்பதற்கு நிர்வாகம் அதிக முன்னுரிமை அளிக்கும்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான முறைப்பாடுகள் தொடர்பான ஒம்புட்ஸ்மேன் பதவியை ஸ்தாபித்தல் மற்றும் அதனைக் கண்காணிக்க ஒரு சுயாதீனமான பணிக்குழுவை நிறுவுதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய அரசாணையின் கீழ், பல்கலைக்கழக நிர்வாகம் 09 அம்சங்களுக்கு உடன்பட்டுள்ளது, இதில் பாலியல் துன்புறுத்தல் பற்றிய புள்ளிவிவர தகவல்களை வெளியிடுவது, பாலியல் துன்புறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அறிவிப்பது உட்பட தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கு இது குறித்து தெரிவிக்க வேண்டும்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும், புதிய சாசனத்திற்கு முழு பல்கலைக்கழக அமைப்பும் சம்மதிக்க வேண்டும் என்றும் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.