சட்ட விரோதமாக குடியேறியவர்கள் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் போது மத்திய அரசு போதிய உண்மைகளை முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நிராகரித்துள்ளார்.
அரசாங்கம் அனைத்து உண்மைகளையும் உரிய முறையில் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நீதிமன்றத் தீர்ப்பின்படி செயற்பட அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேறிகளை உடனடியாக விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதன்படி, புலம்பெயர்ந்தோர் இருக்கும் இடத்தை கண்காணிக்கக்கூடிய சாதனங்களை அணிவது உட்பட பல விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.