வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் கிறிஸ் மின்ன்ஸ் மாநிலத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை வலியுறுத்தியுள்ளார்.
பாடசாலை வளாகத்தில் எந்தவொரு அரசியல் செயற்பாடுகளுக்கும் இடமில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் அரசியல் ரீதியாக செயலற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும் நியூ சவுத் வேல்ஸ் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை கற்பித்தலில் பங்கேற்காமல் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்குமாறு சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுக்கு பலியாக வேண்டாம் என நியூ சவுத் வேல்ஸ் கல்வி அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனை தொடங்கி கடந்த 6 வாரங்களில் சிட்னியில் 73 போராட்டங்கள் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.