ஆஸ்திரேலியாவில், முதியோர் சமூகம் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகள் அதிகம்.
கடந்த ஆண்டு நீரில் மூழ்கி இறந்தவர்களில் 77 சதவீதம் பேர் ஆண்கள் என்றும், அவர்களில் 57 சதவீதம் பேர் 45 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்றும் ராயல் லைஃப்சேவிங் சொசைட்டி சுட்டிக்காட்டியுள்ளது.
2021 ஆம் ஆண்டில் நீரில் மூழ்கி விபத்துக்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 339 ஆகவும், 2022 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 281 ஆகவும் உள்ளது.
சிறு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 33 சதவீதம் குறைந்துள்ளதும் சிறப்பு.
நியூ சவுத் வேல்ஸில் அதிகபட்சமாக 107 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குடும்ப உறுப்பினர் ஒருவரைக் காப்பாற்றும் முயற்சியில் முதியவர்களில் பெரும்பாலானோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நீச்சலடிப்பதற்கு முன் அந்த இடங்கள் பாதுகாப்பானவையா என்பதைக் கண்டறியவும், மது அருந்திவிட்டு நீந்துவதைத் தவிர்க்கவும் உயிர்காப்பு சங்கம் மேலும் அறிவுறுத்துகிறது.