2030ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய காலநிலை மாற்ற இலக்குகளை அவுஸ்திரேலியா அடையும் என எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடுத்த 07 ஆண்டுகளில் தற்போதைய கரியமில வாயு வெளியேற்றம் 42 சதவீதத்தால் குறைக்கப்பட உள்ளது.
மேலும், காற்றாலை-சூரிய சக்தி மற்றும் நீர்மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மின் தேவையை 82 சதவீதமாக பூர்த்தி செய்யும் இலக்கை உயர்த்துவதும் அரசின் திட்டங்களில் ஒன்றாகும்.
தற்போது அது 35 சதவீதமாக உள்ளது.
மத்திய அரசின் எரிசக்தி இலக்குகள் பலவீனமான நிலையில் இருப்பதாக பல சுற்றுச்சூழல் அமைப்புகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் எரிசக்தி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகள் எட்ட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளன, ஆனால் அரசின் அர்ப்பணிப்பு பலவீனமாகவே உள்ளது என்பதே அவர்களின் நிலைப்பாடு.