உயர் கல்விக்காக அவுஸ்திரேலியாவுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் ஆளும் தொழிலாளர் கட்சி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதன்படி, வழங்கப்படும் மாணவர் வீசாக்களின் எண்ணிக்கைக்கு அதிகபட்ச பெறுமதி விதிக்கப்படும் எனவும், சர்வதேச மாணவர்களுக்கு புதிய வரி விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் மாணவர் விசா வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, இந்த நாட்டில் மாணவர் வீசா வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 725,000-க்கும் அதிகமாக உள்ளது, இதுவே வீட்டு வாடகை மற்றும் வீட்டு நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் மதிப்பீடுகளின்படி, இந்த ஆண்டு 520,000 குடியேற்றவாசிகள் மட்டுமே ஒட்டுமொத்த குடியேற்றத் திட்டத்தின் கீழ் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
வரம்பற்ற மாணவர் வீசா வழங்கல் மூலம், அவுஸ்திரேலியாவின் வீட்டுச் சந்தை நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் சில வருடங்களில் இக்கட்டான நிலைமையாக மாறக்கூடும் எனவும் பல தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாணவர் விசா முறையை கடுமையாக்குவது தொடர்பான அனைத்து திட்டங்களும் அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளன.