Canberraஅடுத்த சில வாரங்களில் சிட்னி - மெல்போர்ன் - கான்பெராவில் கனமழை...

அடுத்த சில வாரங்களில் சிட்னி – மெல்போர்ன் – கான்பெராவில் கனமழை பெய்யும்

-

சிட்னி, மெல்பேர்ன் மற்றும் கன்பரா ஆகிய 03 முக்கிய நகரங்களில் அடுத்த சில வாரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகள் போதிய மழையின்றி தவித்து வந்த நிலையில் எதிர்காலத்தில் இந்த நிலை காணாமல் போகும் என கூறப்படுகிறது.

குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் இந்த நாட்களில் 100 முதல் 200 மில்லிமீற்றர் வரையான கடும் மழை பெய்துள்ளதாகவும் பயிர்களுக்கு போதியளவு நீர் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாட்களில் தெற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் நாளை பிற்பகல் முதல் ஒரு வாரத்திற்கும் மேலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும், அது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் வானிலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் தற்போது நிலவும் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest news

இனி ஆஸ்திரேலியர்களுக்கு $4,000 சேமிக்க ஒரு சிறப்பு வாய்ப்பு

மலிவு விலையில் சூரிய மின்கலங்களை வழங்கும் திட்டத்தை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று (06) அறிவித்தார். மே 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர்...

ஆஸ்திரேலியாவில் பணியிட கலாச்சாரத்தை மாற்றும் பெண்கள்

ஆஸ்திரேலியாவில் பணியிட கலாச்சாரத்தை மாற்ற ஆண்களை விட பெண்கள் அதிக உந்துதல் பெறுவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது. ஆண்கள் மாறுவதற்கு ஒப்பீட்டளவில் தயங்குகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில்...

தொழிலாளர் சட்டங்களை மீறும் ஆஸ்திரேலிய பணியிடங்கள் எதிராக நடவடிக்கை

ஆஸ்திரேலியாவில் உள்ள ஊழியர்கள் தங்கள் முதலாளிக்கு எதிராக இலவச சட்ட ஆலோசனையைப் பெறலாம். The Fair Work Ombudsman மூலம் இந்த இலவச சட்ட ஆலோசனையை பெறலாம். பணியிட...

கஜகஸ்தானில் அரியவகை தாதுக்கள் கண்டுபிடிப்பு

மத்திய ஆசியாவில் உள்ள நாடுகளிலொன்றான கஜகஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியளவில் அரிய தாதுக்களின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கஜகஸ்தான் நாட்டில் கரகண்டா பிராந்தியத்திற்குள் உள்ள குய்ரெக்டிகோல்...

ஆஸ்திரேலியாவில் பணியிட கலாச்சாரத்தை மாற்றும் பெண்கள்

ஆஸ்திரேலியாவில் பணியிட கலாச்சாரத்தை மாற்ற ஆண்களை விட பெண்கள் அதிக உந்துதல் பெறுவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது. ஆண்கள் மாறுவதற்கு ஒப்பீட்டளவில் தயங்குகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில்...

டார்ச் லைட்டை வானில் அடித்தவருக்கு ஜெயில்

அதிக வெளிச்சம் கொண்ட டார்ச் லைட்டை விமானத்தை நோக்கி நீட்டிய ஒருவரை மத்திய போலீசார் கைது செய்துள்ளனர். அடிலெய்டில் வசிக்கும் 58 வயதான இந்த நபர், தனது...