சமீபத்திய நியூஸ்போல் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சுமார் 50 சதவீத ஆஸ்திரேலியர்கள் நிதி அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1,216 வாக்காளர்களைப் பயன்படுத்தி குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதுடன், அனைத்து வயதினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்காளர்கள் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
35 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் இரண்டு வருட நெருக்கடியை அடுத்து நிதி அழுத்தத்தில் இருப்பதாகக் கூறினர்.
கட்டுப்படியாகாத வாடகை வீட்டு விலைகள், அடமானச் செலவுகள், வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் என வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழுவில், 56 சதவீத வாடகைதாரர்களும், அடமானத்தில் பணம் செலுத்துபவர்களில் 53 சதவீதமும் கடுமையான நிதி அழுத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2 வருடங்களுடன் ஒப்பிடுகையில் பெண்ணின் நிதி அழுத்தமானது 53 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் ஆண்களின் நிதி அழுத்தங்கள் 48 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மீதான மக்களின் நம்பிக்கை 40 சதவீதமாக குறைந்துள்ளதாக சமீபத்திய நியூஸ்போல் சர்வே அறிக்கைகள் தெரிவிக்கின்றன.