Newsபத்தாயிரம் ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரம்

பத்தாயிரம் ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரம்

-

பத்தாயிரம் ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை உருவாக்கும் பணியில் தற்போது தீவிரம் காட்டிவருகிறார் அமேசான் நிறுவனத்தின் நிறுவுனர் ஜெப் பசோஸ். 500 அடி உயரம் கொண்ட இந்தக் கடிகாரம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான மலை ஒன்றுக்குள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு சுமார் 1400 கோடி ரூபா செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிகாரத்திற்கானத் திட்டம் டேனி ஹில்லிஸ் எனும் அறிவியலாளருடையது. இந்தக் கடிகாரத்திற்கு க்ளொக் ஒப் த லோங் (Clock of the Long) எனப் பெயரிட்டுள்ளனர். மேலும் இந்தக் கடிகாரத்தின் நொடிமுள் ஒரு ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு வருடம் என்பது ஒரு நொடியாக அளவிடப்படுவதாக ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மணியளவின் படி இந்தக் கடிகாரம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு இயங்கப்போவதாகக் கூறியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கடிகாரம் ஒலி எழுப்பும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது நீண்டகால சிந்தனைக்கான நினைவுச்சின்னமாக உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கட்டுமானப்பணிகள் முடிவடைந்து மக்கள் பார்வையிட வரும்போது, தங்கள் பெயரும் இந்த கடிகாரத்தைப் போலக் காலம் கடந்து நிற்க வேண்டும் என்ற ஊக்கத்தைப் பெற வேண்டும் எனவும் விரும்புவதாக கடிகாரக் கட்டுமானத் திட்டக்குழு தெரிவித்துள்ளது.

முதலில் இன்னும் பத்தாயிரம் ஆண்டுகள் மனிதர்களால் பூமியில் வாழ முடியுமா என எழும் கேள்விகளுக்கு அந்த நம்பிக்கையை விதைக்கும் நோக்கமே இந்தக் கடிகாரம் என அந்நிறுவனம் தனது வலைதளப் பக்கத்தில் பதிலளித்துள்ளது.

இந்தக் கடிகாரத்தின் முதல் ஒலி இன்னும் 1000 ஆண்டுகளுக்குப் பின்னரே கேட்கும் என்ற நிலையில், அதனைக் கேட்கப்போகும் உயிர்களை உருவாக்கும் உயிர்கள் கூட இன்னும் உருவாகவில்லை என்பது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

நன்றி தமிழன்

Latest news

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

உயிருள்ள இரால்களை பரிமாறும் சிட்னி உணவகம்

சிட்னியில் உள்ள ஒரு கொரிய கடல் உணவு உணவகம் உயிருள்ள நண்டுகளை சாப்பிடும் சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருகிறது. பச்சையான கடல் உணவை வழங்கும் இந்த பிரபலமான...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...