கடந்த நவம்பர் 8ஆம் திகதி சுமார் 14 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட சேவைத் தோல்வியால் சிரமத்துக்குள்ளான வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கத் தொடங்கியுள்ளதாக Optus Communications நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், எத்தனை பேருக்கு எவ்வளவு பணம் வழங்கப்படும் என்பதை அவர்கள் சரியாக வெளியிடவில்லை.
குறித்த நாளில் 10 மில்லியன் மக்களும் 04 இலட்சம் வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுக்காக ஆப்டஸ் 200 ஜிகாபைட் டேட்டாவை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு, பலரும் விமர்சித்தனர்.
Optus சேவைகள் செயலிழந்தமை தொடர்பில் ஏற்கனவே பல விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான அசௌகரியங்கள் ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.