Newsஇலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

-

தமிழகத்தின் இராமநாதபுரம் மண்டபம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் அகதி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த சந்திரமோகன் (43). இவரது இரண்டாவது மகன் தனுஷ் (21), அதே முகாமில் உள்ள உறவினா் பெண்ணை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தாா்.

இதையடுத்து, இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோா் முடிவு செய்தனா். ஆனால், தனுஷின் மூத்த சகோதரா் திருமணம் முடிந்தவுடன், அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறினா்.

ஆனால், உடனடியாகத் திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரை வலியுறுத்தி வந்த தனுஷ், செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து மண்டபம் பொலிஸ் நிலைய பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

அமெரிக்காவும் சீனாவும் வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டன!

அமெரிக்காவும் சீனாவும் 90 நாள் கட்டண இடைவெளிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் விதிக்கும் கட்டணங்களைக் குறைத்துள்ளன. சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை 145% லிருந்து 30% ஆகவும்,...

போப் லியோவின் பதவியேற்பு விழாவிற்காக ரோம் செல்கிறார் பிரதமர்

போப் லியோ XIV இன் பதவியேற்பு திருப்பலியில் கலந்து கொள்ளவும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ரோம் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை போப்பின் முறையான பதவியேற்பு...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...