Newsயூடியூப் இல் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்

யூடியூப் இல் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்

-

காணாளிகளுக்கான உலகின் முன்னணி வலைதளமாக செயற்படும் யூடியூப், இணையத்தில் விளம்பரங்களை தடுக்க செய்யும் ஆட் பிளாக்கர் (Ad Blocker) சேவைகளை எதிர்கொள்ளும் நோக்கில் யூடியூப் தனது பிரீமியம் சந்தாவில் (Premium Subscription) சேரும் படி பயனர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேலும் பிரீமியம் சந்தாவில் புதிய வசதிகளை செயல்படுத்தும் பணிகளில் யூடியூப் தொடர்ந்து மும்முரம் காட்டி வருகிறது. அந்த வரிசையில், யூடியூப் பிரீமியம் சந்தாவின் கீழ் கேமிங் செய்வதற்கான வசதியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. புதிய அறிவிப்பின் படி பயனர்கள் யூடியூப் பிரீமியம் சந்தா வாங்கும் போது விளம்பரங்கள் இல்லா காணொளிகளை பார்ப்பதோடு, கேமிங் சேவையை பயன்படுத்த முடியும்.

புதிய கேமிங் சேவை “யூடியூப் பிளேயபில்ஸ்” (Youtube Playables) என்று அழைக்கப்படுகிறது. இதற்காக யூடியூப் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் தளங்களில் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் பயனர்கள் விளையாடுவதற்காக நிறைய கேம்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பயனர்கள் யூடியூப் தளத்திற்குள்ளேயே நேரடியாக விளையாட முடியும்.

இந்த கேம்களை தற்போதைக்கு டெஸ்க்டாப்-இல் இலவசமாக விளையாட முடியும். மொபைல் செயலியிலும் யூடியூப் பிளேயபில்ஸ் கிடைக்கிறது. எனினும், யூடியூப் பிரீமியம் வைத்திருப்போர் கூட இதில் உள்ள கேம்களை விளையாட முடியாது. அந்த வகையில், இந்த சேவை இன்னும் முழுமையாக வெளியாகவில்லை என்றே தெரிகிறது.

அடுத்த ஆண்டு மார்ச் 28-ம் தேதிக்கு பிறகு கேம்களை யூடியூப் பிரீமியம் பயனர்களுக்கு தொடர்ந்து வழங்குவது பற்றி யூடியூப் முடிவு செய்ய உள்ளது. தற்போதைக்கு கேம்கள் இலவசமாக வழங்கப்படுவதால், பயனர்கள் யூடியூப் பிரீமியம் சந்தா செலுத்தாமலும் கேம்களை விளையாடி பார்க்க முடியும்.

நன்றி தமிழன்

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...