கடந்த சில மாதங்களில் ஆஸ்திரேலியர்களை குறிவைத்து 336 மில்லியனுக்கும் அதிகமான குறுஞ்செய்திகள் தடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை முதல், ஒரு வயது வந்தவர் ஒருவருக்கு இதுபோன்ற 16 குறுஞ்செய்திகள் வந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மோசடி தடுப்பு வாரத்துடன் இணைந்து ஆஸ்திரேலிய தகவல் தொடர்பு மற்றும் ஊடக ஆணையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் மோசடியான தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அதிகரிக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, அவுஸ்திரேலியர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.