News'திரெட்ஸ்' செயலியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அம்சம்

‘திரெட்ஸ்’ செயலியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அம்சம்

-

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் நிறுவனமான மெட்டா, (எக்ஸ் தளம்)ட்விட்டருக்குப் போட்டியாக ‘திரெட்ஸ்’ என்ற செயலியைக் கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது.

அறிமுகமான சில நாள்களில் பயனர்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவில் அதிகரித்தாலும் ஒரு சில வாரங்களில் திரெட்ஸ் அதன் பயன்பாட்டில் பின்னடைவைச் சந்தித்தது.

இதையடுத்து திரெட்ஸ் தனது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி திரெட்ஸ் செயலியில் தேடலில்(search) அனைத்து மொழிகளையும் பயன்படுத்தலாம்.

திரெட்ஸில் “’கீவேர்டு தேடல்’ அனைத்து மொழிகளையும் ஆதரிக்கும்” என்றும் “இது உங்களுக்கு விருப்பமான உரையாடல்களைக் கண்டறிவதற்கு வழிவகுக்கும்” என்றும் இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும் உங்களிடம் இதுகுறித்த கருத்துகள் இருந்தால் தெரியப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட ஆங்கிலம் பேசும் நாடுகளில் இது சோதிக்கப்பட்ட இப்புதிய வசதி தற்போது 10 கோடி பயனர்கள் உள்ள திரெட்ஸின் பயன்பாட்டை அதிகப்படுத்தும் என்று அமெரிக்க தொழில்நுட்ப செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

மேலும் இன்ஸ்டாகிராம், திரெட்ஸ் செயலிகள் ஒன்றோடொன்று இணைந்துள்ளதாக கூறிய நிறுவனம், தற்போது இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்காமல் திரெட்ஸ் செயலியை நீக்கலாம் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதுபோல, ஐரோப்பிய ஒன்றியத்தில் திரெட்ஸ் செயலி அடுத்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றி தமிழன்

Latest news

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...