Newsஉலகின் சோகமான யானை உயிரிழப்பு

உலகின் சோகமான யானை உயிரிழப்பு

-

விலங்குகள் நல ஆர்வலர்களால் “உலகின் சோகமான” (World’s ‘saddest’ elephant) யானை என பெயரிடப்பட்ட “விஷ்வ மாலி” எனப்படும் யானை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மாலி தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தனியாகவே கழித்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா மிருகக்காட்சிசாலையில் உயிரிழந்துள்ளது.

மாலியின் மரணம் குறித்து மணிலாவின் மேயர் முகப்புத்தகத்தில் காணொளியில் அறிவித்துள்ளார். அதில் அவர் “மாலியைப் பார்க்க மிருகக் காட்சிசாலைக்குச் சென்றது தனது மகிழ்ச்சியான குழந்தைப் பருவ நினைவுகளில் ஒன்றாகும் ”என தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை(24) மாலி தனது தும்பிக்கையை சுவரில் தொடர்ந்து தேய்த்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று முன்தினம்(28) யானையின் நிலைமை மிகவும் மோசமடைந்ததுடன், அதிகமாக சுவாசிக்க சிரமப்பட்டுள்ளது. பின்னர் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டும், அன்று மதியம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மேலும், பிரேத பரிசோதனையில் யானைக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமனியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மாலி, மறைந்த பிலிப்பீனிய குடியரசுத் தலைவர் பெர்டினான்டு மார்க்கோசின் மனைவியான இமெல்டா மார்கோஸுக்கு 1981ஆம் ஆண்டு 11 மாத குழந்தையாக இருந்தபோது இலங்கை அரசால் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

மணிலா மிருகக்காட்சிசாலையில் 1977ஆம் ஆண்டில் வந்த மற்றொரு யானையான ஷிவா, 1990ஆம் ஆண்டில் உயிரிழந்ததிலிருந்து மிருகக்காட்சிசாலையில் மாலி யானை மட்டுமே இருந்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில், மணிலா உயிரியல் பூங்கா குழந்தைகளுக்கான தடுப்பூசி மையமாக செயல்பட்டது. அங்கு மாலி அவர்களை மகிழ்விக்க தனது நேரத்தை செலவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest news

தெற்கு ஆஸ்திரேலியாவில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு $20 மில்லியன் மதிப்புள்ள கோகைனை ரகசியமாக இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அடிலெய்டைச் சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார். துப்பறியும் நபர்கள்,...

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...

பேரழிவு சூழ்நிலை காரணமாக பல V/Line சேவைகள் ரத்து

ஜனவரி 9, வெள்ளிக்கிழமை விக்டோரியாவின் வட மத்திய, வடக்கு நாடு, தென்மேற்கு மற்றும் Wimmera மாவட்டங்களுக்கு பேரழிவு தரும் தீ ஆபத்து மதிப்பீடுகள் இருக்கும் என்று...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

பெர்த்தில் நேருக்கு நேர் மோதிய இரு மோட்டார் சைக்கிள்கள் – ஓட்டுநர்கள் பலி

பெர்த்தின் மேற்கு புறநகர்ப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர். Wembley-இல் உள்ள Pangbourne தெருவுக்கு அருகிலுள்ள Grantham தெருவில் இரவு 10.50...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...