News1000 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்துவிழும் அபாயத்தில்!

1000 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்துவிழும் அபாயத்தில்!

-

இத்தாலியின் போலோக்னா நகரின் முக்கிய அடையாளமாக கரிசெண்டா சாய்ந்த கோபுரம் திகழ்கிறது.
900 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோபுரம் கடந்த சில ஆண்டுகளாக, படிப்படியாக சாயத் தொடங்கியதையடுத்து அறிவியல் ஆய்வுக்குழுவினர் இந்த கோபுரத்தை ஆய்வு செய்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு முதல் தளத்தை கண்காணித்த அறிவியல் குழுவினர், சமீபத்தில் 27 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அதில், கோபுரத்தின் தன்மை மோசமாக இருப்பதாகவும், இடிந்து விழுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் வெளியான சென்சார் அளவீடுகள், இந்த எச்சரிக்கையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
கோபுரம் தற்போது 4 பாகை கோணத்தில் சாய்ந்துள்ளதாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாலியின் மிகவும் பிரபலமான பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் 5 பாகை கோணத்தில் சாய்ந்திருக்கிறது. இதை ஒப்பிட்டால் கரிசெண்டா கோபுரத்தின் சாய்வு கோணம் குறைவுதான். ஆனால், கட்டிடத்தின் உறுதித்தன்மை மோசமடைந்துள்ளததனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோபுரத்தை சுற்றி வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கோபுரத்தை சுற்றிலும் வலுவான வேலி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கோபுரத்தின் இடிபாடுகளை வெளியில் விழாமல் தடுத்து, சுற்றியுள்ள கட்டிடங்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு வலைகளுடன் கூடிய உலோக வளைவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். உலோக வளைவு தரையில் உறுதியாக பொருத்தப்படும். உலோகத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ராக்ஃபால் பாதுகாப்பு வலைகளும் தரையில் வலுவாக நங்கூரமிடப்படும்.
எனினும், கோபுரம் எப்போது இடிந்து விழும் என்பது சரியாக கணிக்கப்படாத நிலையில், மக்கள் வெளியேறுவதற்கான எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
இத்தாலியின் போலோக்னா நகரின் அடையாளங்களாக இரண்டு சாய்ந்த கோபுரங்கள் உள்ளன. அவை பழைய வளையச் சுவரின் (old ring wall) வாயில்களுக்குச் செல்லும் சாலைகளின் சந்திப்பில் அமைந்துள்ளன. உயரமான கோபுரம் அசினெல்லி என்றும், அதிக அளவில் சாய்ந்த சிறிய கோபுரம் கரிசெண்டா என்றும் அழைக்கப்படுகிறது. அசினெல்லி கோபுரம் 319 அடி உயரம் கொண்டது. கரிசெண்டா கோபுரத்தின் உயரம் 157 அடி ஆகும்.
1109-1119 காலகட்டத்தில் கோபுரங்களைக் கட்டியதாகக் கருதப்படும் குடும்பங்களின் பெயர்கள் இந்த கோபுரங்களுக்கு சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

உலகில் அரிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை இரத்தம்

கர்நாடகாவைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவருக்கு உலகிலேயே புதிய வகை இரத்தம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவர் இருதய அறுவை சிகிச்சைக்காகப் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து...

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பூச்சி கண்டுபிடிப்பு

வடக்கு குயின்ஸ்லாந்தின் வெப்பமண்டல மழைக்காடுகளில் ஒரு புதிய வகை ராட்சத குச்சி பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 44 கிராம் எடையுள்ள இந்தப் பெண் பூச்சி, ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் கனமான...

கத்திகளை அகற்றுவதற்கான சலுகை காலத்தை அறிவித்தார் Machete

விக்டோரியா அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒரு எச்சரிக்கை உள்ளது, இதன் மூலம் கத்தியை வைத்திருப்பது, எடுத்துச் செல்வது அல்லது வாங்குவது சட்டவிரோதமானது. இந்த...

YouTube-இல் சாதனை படைத்துள்ளார் MrBeast

YouTuber MrBeast, 400 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று, Play பட்டனை அடைந்த உலகின் முதல் YouTuber என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதை YouTube தலைமை நிர்வாக அதிகாரி...

சிட்னியில் Legionnaires நோய் பரவியதில் ஒருவர் பலி

சிட்னியில் Legionnaires நோய் பரவியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் மாத இறுதியில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த Potts Point-ஐ சேர்ந்த எண்பது...

YouTube-இல் சாதனை படைத்துள்ளார் MrBeast

YouTuber MrBeast, 400 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று, Play பட்டனை அடைந்த உலகின் முதல் YouTuber என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதை YouTube தலைமை நிர்வாக அதிகாரி...