ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காணாவிட்டால் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நியூ சவுத் வேல்ஸ் பாராமெடிக்கல் சங்கம் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொழிற்சங்கங்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே நடைபெற்ற சம்பளப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2,000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் மறுபதிவு செய்ய மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான தொழில்சார் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அரச அவசர சேவைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான தொகையும், பணமும் மாநில அரசிடம் இல்லை என அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதன்படி 20 வீத சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்துள்ளதாக சுகாதார சேவை சங்கங்கள் தெரிவித்திருப்பதுடன், எதிர்வரும் இரண்டு வருடங்களில் மேலதிகமாக 4 வீத சம்பள அதிகரிப்பு தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், 8 மாதங்களுக்கும் மேலாக சம்பள முரண்பாடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.