இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு சொந்தமான மும்பை ஹோட்டலில் வேஷ்டி, சட்டையில் சென்ற மதுரை பிரபலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த ராம், தமிழ் ராப் பாடல்கள் பாடி இன்ஸ்டகிராமில் ராவண ராம் என்ற பெயரில் பிரபலமானார். எப்போது வேஷ்டி சட்டை அணிந்து ராப் பாடல், அடுக்குமொழி பேசி தொடர்ந்து காணொளி வெளியிட்டு வரும் இவரை ஏராளமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ராவண ராம் மும்பையில் சென்ற நிலையில் வேஷ்டி சட்டை அணிந்து விராட் கோலியின் ஹோட்டலுக்கு உணவு சாப்பிட சென்ற போது வேஷ்டி சட்டையில் ஹோட்டலுக்குள் செல்ல அனுமதியில்லை என ஊழியர்கள் கூறி அவரை வெளியே அனுப்பியுள்ளனர். இதனால் மனவருத்தம் அடைந்த ராவண ராம் அந்த ஹோட்டல் முன்பு நின்றபடி தனக்கு நேர்ந்த சம்பவத்தை பேசி காடிணாளியாக வெளியிட்டுள்ளார்.
காணொளி
இதுதான் விராட் கோலியின் ஒன்8 ஹோட்டல். இப்படி நடந்தது மனதுக்கு கஷ்டமாகி விட்டது. விராட் கோலியின் பெயருக்காக இங்கு வருகின்றனர். இதை சொல்லியே ஆக வேண்டும். நான் புதிய வேஷ்டி அணிந்து தான் ஹோட்டலுக்கு வந்தேன். ஆனால் டிரஸ்கோட் சரியில்லை என ஊழியர்கள் என்னை அனுமதிக்கவில்லை. .நான் தமிழ் கலாசார உடையுடன் வந்துள்ளேன். அத்தோடு அதிக பசியோடு வந்தேன் .ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. இது மனதுக்கு ரொம்ப கஷ்டமாகயுள்ளது. வருத்தத்தோடு அறைக்கு செல்கிறேன்” என காணொளி வெளியிட்டுள்ளார்.
நன்றி தமிழன்