Newsவீட்டுக்கு ஒரு விமானம் உள்ள கிராமம்

வீட்டுக்கு ஒரு விமானம் உள்ள கிராமம்

-

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கேமரூன் ஏர்பார்க் என்ற கிராமத்தில் வீட்டுக்கு ஒரு விமானம் என மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

கழுகு பார்வையில் பார்த்தால் விமான நிலையம் போல் காட்சியளிக்கும் இக்கிராமத்தில் வேலைக்கு செல்லவும் அலுவலகத்திற்கு செல்லவும் விமானத்தை பயன்படுத்துகின்றனர்.

விமானம் வைத்திருக்க விமான ஓட்டிகளுக்கான லைசன்ஸ் மற்றும் விமானத்தை இயக்குவது குறித்த விவரங்களை தெரிந்தவர்கள் மட்டுமே விமானம் வைத்திருக்க அனுமதிக்கப்படுவதுடன் அவர்களை தவிர்ந்தவர்களுக்கு அதிகாரம் மறுக்கப்பட்டுள்ளது. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற விமானிகளெனினும் மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர்.

இங்கு மொத்தம் 124 வீடுகளைக் கொண்ட இக்கிராமம் 1963ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டதுடன் விமானங்களை தங்கள் வீடுகளுக்கு முன்பாக தரையிறக்கவும் அருகில் உள்ள விமான நிலையத்திற்கு எளிதாக செல்லவும் 100 அடி அகலத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்கா, விமானங்களின் செயல்பாட்டை ஊக்குவித்த நிலையில், இவ்விமான நிலையங்களை ஓய்வு பெற்ற ராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு விமான பூங்காவாக மேம்படுத்த அந்த நாட்டின் விமான போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்ததனால், கேமரூன் ஏர்பார்க் கிராமத்தில் வீட்டிற்கு ஒரு விமானம் வைத்துள்ளனர்.

Latest news

இன்று முதல் விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் வெப்பநிலை குறைய ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டின் பல பகுதிகளில் நேற்று பதிவான அதிக வெப்பநிலை படிப்படியாக குறைவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம்...

சீனாவின் 15 நாள் இலவச விசா கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா

சீனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான 15 நாள் இலவச விசாக் கொள்கையில் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட...

10 மாதங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு 200,000 டன் ஆட்டுக்குட்டி ஏற்றுமதி

ஆஸ்திரேலியா இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 200,000 டன் ஆட்டுக்குட்டிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆட்டு இறைச்சி ஏற்றுமதியில் 2024ம் ஆண்டு சாதனை...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

உலகின் 10 சிறந்த நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நகரம்

டைம் அவுட் இதழால் வெளியிடப்பட்ட உலகின் 10 சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் ஒரு நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை ஆலோசனை நிறுவனமான...