Newsமிக்ஜாம் புயலால் முடங்கி போன சென்னை

மிக்ஜாம் புயலால் முடங்கி போன சென்னை

-

மிக்ஜாம் புயலால் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வீதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புப் பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல், இன்று (டிச.4) தமிழக வடகடலோர மாவட்டங்களை நெருங்கிச்செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தற்போது சென்னையில் இருந்து 110 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. நாளை புயல் மேலும் தீவிரமடைந்து தெற்கு ஆந்திராவின் நெல்லூர் – மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கிறது.

புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரிக்கு காற்று மற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நேற்றிரவு முதலே இடைவிடாத கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னையின் பல பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் தரைத் தளங்களில் வசிப்போர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மழை பாதிப்பு அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகமிக அவசியமான சூழல் இன்றி வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 29 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஜிஎஸ்டி சாலை நீரில் மூழ்கியுள்ளது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பரவலாக மின் தடை ஏற்பட்டுள்ளது. சென்னை புறநகரைப் பொருத்துவரை பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலை மூடப்பட்டுள்ளது. நகருக்குள்ளும் பெரும்பாலும் பல பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் சிலர் ஊடகப் பேட்டிகளில் 2015 மழை வெள்ளம் திரும்பிவிட்டதுபோல் உணர்வதாகத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தமிழக வருவாய்த் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்ஆர் ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “இடைவிடாமல் பெய்யும் கனமழையால் நகரில் பரவலாக மழைநீர் தேங்கியுள்ளதாகப் புகார்கள் வருகின்றன. புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், கனமழை தொடர்ந்து கொண்டிருப்பதால் உடனடியாக தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியாது. மழை நின்றவுடன் தண்ணீரை வெளியேற்றும் பணியை மாநகராட்சிப் பணியாளர்கள் தொடங்குவார்கள்.

சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளால் தான் இந்த அளவுக்காவது மக்கள் இயல்பாக வெளியே வரமுடிகிறது. மீதமுள்ள 10 முதல் 15 சதவீதப் பணிகளையும் விரைவில் முடிக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதையும் செய்வோம். சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் மீட்பு, நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மக்கள் அவசியமின்றி வெளியேற வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று மாலைக்கு மேல் மழை குறையும் என்பதால் நாளை விடுமுறை விடுவதற்கான அவசியம் இருக்காது என்றே கருதுகிறோம்” என்றார்.

அதேபோல் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவும், மழை நின்ற பின்னர் கால்வாய்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெறும் என்று கூறியுள்ளார்.

விமான சேவைகள் முடக்கம்:

கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னைக்கு வர வேண்டிய 16 விமானங்கள் பிற பகுதிகளுக்கு திருப்பிவிடப்பட்டன. விமான நிலைய ஓடுபாதையில் 2 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது.

விமான நிலைய ஓடுபாதை பகுதியில் இருந்து மழைநீர் வெளியேறும் கால்வாயை தொடர்ந்துகண்காணித்து நீர் தேங்காதபடிவெளியேற்ற கூடுதல் ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தேவையிருந்தால் அந்தந்த விமான நிறுவனங்கள் தங்கள்விமானங்களை புயல் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக பெங்களூர், ஹைதராபாத், திருச்சி, கோவை, மதுரை போன்ற விமான நிலையங்களுக்கு கொண்டு சென்று நிறுத்திக் கொள்ளலாம்.

சென்னை விமான நிலையத்தில் தங்கியுள்ள பயணிகள், விமானநிலைய ஊழியர்கள், விமான நிறுவன ஊழியர்கள் உட்பட சென்னை விமான நிலையத்தை சார்ந்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தேவையான உணவு, குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மின்தடைகள் ஏற்பட்டால், அவசர தேவைக்கு தேவையான, ஜெனரேட்டர்கள், இன்வெர்ட்டர்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சென்னை விமான நிலையத்தின் பின்பகுதியில் ஓடும் அடையாறு ஆற்றின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க சிறப்புகுழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைகள் பெறப்பட்டு, உடனடியாக, அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அதற்கேற்ப விமான நிறுவனங்கள், தங்களது விமான இயக்கம்பற்றி முடிவு செய்து கொள்ளலாம். விமான நிலையத்தில் உள்ள அனைத்து தரப்பு ஊழியர்களும் விடுப்பு இல்லாமல் பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

11 ரயில்கள் ரத்து:

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வியாசர்பாடி – பேசின் பிரிட்ஜ் இடையேயான 14ஆம் எண் பாலத்தில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டிப் பாய்வதால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் எண் 12007 மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ், 12675 கோவை எக்ஸ்பிரஸ், 12243 கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், 22625 கேஎஸ்ஆர் பெங்களூரு ஏசி டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ், 12639 பெங்களூரு பிரிந்தாவன் எக்ஸ்பிரஸ், 16057 – திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியன ரத்து செய்யப்பட்டுள்ளன.

நன்றி தமிழன்

Latest news

முக்கிய விமான நிலையங்களில் தளர்த்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளின் போது காலணிகளை அகற்ற வேண்டும் என்ற தேவை நீக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம்...

அமெரிக்காவில் மனிதாபிமானமின்றி செயல்படும் குடியேற்ற தடுப்பு மையம் 

அமெரிக்காவில் உள்ள ஒரு தற்காலிக தடுப்பு மையத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மனிதாபிமானமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் புளோரிடாவின்...

சீனாவின் எஃகுத் தொழிலுக்கு உதவ பிரதமர் அல்பானீஸ் பேச்சுவார்த்தை

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சீனாவிற்கு விஜயம் செய்யும் இரண்டாவது நாள் நேற்று ஆகும். முன்னாள் Socceroos starஉம், சீன கிளப்பான ஷாங்காய் துறைமுகத்தின் தற்போதைய மேலாளருமான அவர்,...

ஊடகங்களில் வெளியான ஒரு ரகசிய அரசாங்க அறிக்கை

வரிகளை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து, நிதியமைச்சர் Jim Chalmers தற்செயலாக பத்திரிகையாளர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியதாக ஊடக அறிக்கைகள் பரவி வருகின்றன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அரசாங்கம்...

உலக வல்லரசின் மீதான வரி உயர்வுக்குப் பிறகு டிரம்பை சந்திக்க ஆர்வமாக உள்ள ஆஸ்திரேலியா

மெக்ஸிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது டிரம்ப் புதிய வரிகளை விதிக்கும்போது, அவருடன் அரசாங்கம் ஈடுபட முயற்சிப்பதாக கருவூல செயலாளர் Jim Chalmers அறிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப்...

ஆசியாவின் வயதான யானை மரணம்

ஆசியாவின் வயதான யானையாகக் கருதப்படும் "வத்சலா" உயிரிழந்துள்ளது. வத்சலா இறக்கும் போது அவருக்கு 100 வயது ஆகும். வத்சலாவின் இறுதிச் சடங்குகள் இந்தியாவின் பன்னா புலிகள் காப்பகத்தில் உள்ள...