Sportsஉயிரிழந்த தந்தை என்னுடைய திருமணத்திற்கு ஆவியாக வந்தார்!

உயிரிழந்த தந்தை என்னுடைய திருமணத்திற்கு ஆவியாக வந்தார்!

-

உயிரிழந்த தந்தை தனது திருமணத்திற்கு ஆவியாக வந்ததாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஜெசிக்கா ஜனாசன் அவரது நீண்ட நாள் தோழி சாரா வேரனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் 2020ம் ஆண்டே திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில், கொரோனா காரணமாக இவர்களின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது, பின் 2021ம் ஆண்டு திருமணத்தை திட்டமிட்ட போது ஜெசிக்காவின் தந்தை உயிரிழந்ததால் மீண்டும் திருமணம் தடைபட்டது.

இறுதியில் ஜெசிக்கா ஜனாசன் சாரா வேரன் திருமணம் கடந்த ஏப்ரலில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய தந்தை திருமணத்தில் ஆவியாக வந்து கலந்து கொண்டாதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஜெசிக்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசிய போது, தன்னுடைய தந்தைக்கு வண்டுகள் என்றால் மிகவும் பிடிக்கும், அதனால் தான் அவர் நினைவாக வண்டை தன் உடம்பில் டாட்டூவாக குத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய திருமணத்தின் போது வண்டு ஒன்று தன் கையில் வந்து அமர்ந்ததாகவும், இறுதியில் நாங்கள் ஹோட்டல் அறைக்கு செல்லும் வரை வண்டு தன்னுடன் இருந்ததாகவும் குறிப்பிட்ட ஜெசிக்கா, தனது தந்தை தான் ஆவியாக வண்டு உருவத்தில் என்னுடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முதலில் இதனை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன், அப்போது நமது திருமணத்தை மிஸ் செய்யாமல் தந்தை வந்துவிட்டார் என மனைவி சாரா கிண்டல் கூட செய்தார் என ஜெசிக்கா தெரிவித்துள்ளார்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...