நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை அறிக்கைகளின்படி, மிக மோசமான குற்றவாளியாகக் கருதப்படும் மசூத் ஜகாரியா துருக்கியில் இருந்து நாடு கடத்தப்பட்டு டார்வினுக்கு வந்த பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதான இவர் 02 வருடங்களுக்கு முன்னர் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இவர் மீது பல கொலை வழக்குகள் உள்ளன.
அவர் சிட்னிக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், அது தொடர்பான சம்பவங்களுக்கு தனித்தனியாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்.
சந்தேக நபர் கடந்த ஜனவரி மாதம் துருக்கி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.





