2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இருந்து விலகுமாறு குயின்ஸ்லாந்து பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதீத தொகையை பயன்படுத்தி தற்போது மாநிலத்தில் வசிப்பவர்கள் எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினையைத் தீர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநில அரசுக்கும் பிரிஸ்பேன் நகர சபைக்கும் இடையே ஒலிம்பிக் போட்டிக்கான செலவு தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை வந்துள்ளது.
2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டுக் குழுவில் இருந்து பிரிஸ்பேன் மேயர் அட்ரியன் ஷ்ரினர் நேற்று ராஜினாமா செய்தார்.
தற்போதைய மாநில பிரதமரின் ஆட்சியால் போட்டி தோல்வியடைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காபா ஸ்டேடியத்தை புதுப்பிப்பதற்காக பிரிஸ்பேன் சிட்டி கவுன்சில் வழங்க ஒப்புக்கொண்ட $2.7 பில்லியனை நிறுத்தி வைக்க மேயர் முடிவு செய்தார்.
2032 ஒலிம்பிக்கின் மொத்த செலவு 07 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு 3.4 பில்லியன் டாலர்களையும், மீதமுள்ள 3.6 பில்லியன் டாலர்களை குயின்ஸ்லாந்து மாநில அரசும் வழங்கும்.