Cinemaபடமாகிறது நடிகை சில்க் ஸ்மிதாவில் வாழ்க்கை வரலாறு

படமாகிறது நடிகை சில்க் ஸ்மிதாவில் வாழ்க்கை வரலாறு

-

தமிழ்த் திரையுலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராகத் திகழ்ந்தவரான சில்க் ஸ்மிதா கவர்ச்சி வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதையை, இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக வெளியானது. சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்தார்.

இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. ‘டர்ட்டி பிக்சர்’ திரைப்படம் ‘சில்க் சக்கத் ஹாட்’ என்ற பெயரில் கன்னடத்திலும் வெளியாகி, வரவேற்பைப் பெற்றதுடன் மலையாளத்திலும் சனா கான் நடிப்பில் ‘க்ளைமாக்ஸ்’ என்ற பெயரில் படமாக வெளிவந்தது குறிப்பிடத்த்ககது.

இந்நிலையில், நடிகை சந்திரிகா ரவி நடிப்பில் ‘சில்க் ஸ்மிதா த அன்டோல்ட் ஸ்டோரி’ உருவாகியுள்ளது. 2018இல் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற நடிகை சந்திரிகா ரவி நடிப்பில் ‘சில்க் ஸ்மிதா த அன்டோல்ட் ஸ்டோரி’ உருவாகியுள்ளது.

2023 ஜனவரியில் வெளியான மிகப்பெரிய படமான ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தில் மேலும் பிரபலமான சந்திரிகா ரவி அடுத்த ஆண்டில் மேலும் 3 தென்னிந்திய படங்களை நடித்து முடித்துள்ளார்.

இத்திரைப்படத்தினை எஸ்டிஆர்ஐ சினிமா தயாரிக்க ஜெயராம் இயக்கியுள்ளார். 2024இல் தமிழ், தெலங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பான் இந்தியப் படமாக வெளியாகவுள்ளது. 

இயக்குநர் ஜெயராம் தனுஷின் பிரெஞ்சுப் படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் பகிர் (பக்கிரி) படத்துக்கு தமிழ் வசனங்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Latest news

பாக்டீரியாக்களை கொல்லும் ஒருவகை சிப்பி இனம்

ஆஸ்திரேலிய சிப்பியின் ஒரு இனம் உடலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை சதர்ன் கிராஸ் பல்கலைக்கழகம் நடத்தியது. Sacostria glomerata எனப்படும்...

ஆஸ்திரேலியாவிலிருந்து மேலும் இரண்டு நாடுகளுக்கு மனிதாபிமான விசாக்கள்

சுமார் ஆயிரம் பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு ஆஸ்திரேலியாவால் தற்காலிக மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளது. ஹமாஸ்-இஸ்ரேல் மோதலால் பாதிக்கப்பட்ட இரு நாடுகளின் குடிமக்களுக்கு அக்டோபர் 2024 முதல் தற்போது...

ஆஸ்திரேலியர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்து வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்த புதிய அறிக்கையை மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 20 சதவீதம்...

ஆஸ்திரேலிய மாநிலங்களில் அதிகரித்துவரும் வெப்பநிலை

மேற்கு ஆஸ்திரேலியாவில் நேற்று அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த கோடையில் பெர்த் பெருநகர விமான நிலையத்தில் வெப்பநிலை 44.7 டிகிரியாகவும், நகரின் வெப்பநிலை...

கடந்த சில நாட்களாக விக்டோரியா சாலையில் அதிகரித்துள்ள விபத்துக்கள்

மெல்பேர்ண் கிழக்கில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நபர் இதுவரை உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மவுண்ட் ஈவ்லினில் உள்ள கிளெக் வீதியில் சாரதி...

உலகின் முதல் டிரில்லியனர் பற்றிய புதிய வெளிப்பாடு

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் சொத்துக்கள் குறித்த சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, எலோன் மஸ்க் மீண்டும் உலகின் பணக்காரர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். நேற்றைய நிலவரப்படி அவரது...