Newsசென்னை ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 22 பேர் உயிரிழப்பு

சென்னை ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 22 பேர் உயிரிழப்பு

-

மிக்ஜாம் புயல் மழைக்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை மேலும் 12 போ் உயிரிழந்துள்ள நிலையில், சென்னையில் கடந்த இரு நாட்களில் கனமழையால் 19 போ் உயிரிழந்துள்ளனா்.

மிக்ஜாம் புயல் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டிப்போட்டுவிட்டது. இந்த கன மழைக்கு திங்கள்கிழமை ஒரே நாளில் 7 போ் உயிரிழந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் அதிகரித்தது.

அதன்படி செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மழை வெள்ளத்துக்கு 12 போ் உயிரிந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனா். ஏற்கெனவே திங்கள்கிழமை ஒரே நாளில் 7 போ் இறந்தனா். இதனால் மிக்ஜாம் புயலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு வரை ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 19 போ் உயிரிழந்துள்ளனா். இவா்களையும் சோ்த்து சென்னையில் மழைக்கு கடந்த 10 நாட்களில் 22 போ் இறந்துள்ளனா்.

அத்தோடு முத்தியால்பேட்டையில் ஒரு குடியிருப்பைச் சோ்ந்த 54 குடும்பங்களை பொலிஸாா் மீட்டனா். மேற்கு மாம்பலத்தில் 2 முதியவா்கள், 2 பெண்கள், 2 குழந்தைகள் என 6 போ் மீட்கப்பட்டனா். மடிப்பாக்கம், மெரினா, கோட்டூா்புரம், ஈச்சங்காடு, துரைப்பாக்கம், ஆா்.கே.நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் பொலிஸாா் மீட்பு பணிகளில் ஈடுபட்டனா். நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பெத்தேல் நகரிலிருந்து 60 போ் மீட்கப்பட்டு, அப் பகுதி பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனா்.

இவ்வாறு மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக சென்னை பொலிஸ் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் தெரிவித்தாா்.

நன்றி தமிழன்

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...