News24 மணிநேரத்தில் 99 மதுபான சாலைகளில் மது அருந்தி கின்னஸ் சாதனை

24 மணிநேரத்தில் 99 மதுபான சாலைகளில் மது அருந்தி கின்னஸ் சாதனை

-

சிட்னியைச் சேர்ந்த ஹாரி கூரோஸ் மற்றும் அவரது நண்பர் ஜேக் லாய்டர்டன் ஆகியோர், 24 மணி நேரத்தில் 99 பார்களுக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். இதற்காக 1,500 அவுஸ்திரேலிய டொலர்கள் செலவு செய்துள்ளனர். இதன்மூலம் இவர்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஹென்றிச் டி வில்லியர்ஸ் என்பவர் ஒரே நாளில் 78 பார்களில் மது அருந்தியது முந்தைய சாதனையாக இருந்தது. அதை ஹாரி கூரோஸ்- ஜேக் லாய்டர்டன் நண்பர்கள் முறியடித்திருப்பதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது.

இப்படி ஒரு உலக சாதனை படைப்பதற்கு, இரண்டு முக்கிய காரணங்களை ஹாரி கூரோஸ்- ஜேக் லாய்டர்டன் கூறி உள்ளனர்.

நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய அரியவகை நோயான மல்டிபிள் ஸ்களீரோசிஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுவரும் எம்எஸ் அவுஸ்திரேலியா என்ற அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காகவும், சிட்னியில் கொரோனா பரவல் காரணமாக அழிந்துபோன இரவு நேர கேளிக்கை வாழ்க்கைக்கு புத்துயிர் அளிக்கவும் இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

24 மணி நேரத்தில் 100 பார்களுக்கு செல்ல இருவரும் திட்டமிட்டிருந்த நிலையில் 99ஆவது பாருக்கு சென்று அருந்தியபோது 100வது பார் என தவறாக கணக்கிட்டு, தங்கள் முயற்சியை நிறுத்தியது வேடிக்கையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

விக்டோரியாவில் தேர்வுகள் தொடர்பில் மாநில அரசு விடுத்துள்ள உத்தரவு

விக்டோரியாவில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் ஆண்டு தேர்வுகளை மேற்பார்வையிடும் அமைப்பை மறுஆய்வு செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பரீட்சை தொடர்பான சில மாணவர்களுக்கு இணையத்தில் மாதிரி...

விக்டோரியா பிரதமரின் தலைமைத்துவம் பற்றி எழுந்துள்ள கேள்வி

விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் தலைமையில் மாநில அரசு பிளவுபட்டுள்ளதாக விக்டோரியா எதிர்க்கட்சித் தலைவர் ஜான் பெசுடோ தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், தொழிலாளர் கட்சி எம்.பி.க்கள்...

NSW போக்குவரத்து அபராத முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு டிக்கெட் இல்லாமல் பார்க்கிங் அபராதம் விதிக்க தடை விதித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த அபராத முறையின்...

ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இலங்கை செல்லும் 5 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள்

நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் 61 ஆயிரத்து 767 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் ஒரு...

ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இலங்கை செல்லும் 5 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள்

நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் 61 ஆயிரத்து 767 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் ஒரு...

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது. இது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகவும், நீல திமிங்கலத்தை விட பெரியதாகவும்...