Newsசென்னையில் மழை நின்றும் வடியாத வெள்ளம் - அவதியில் மக்கள்

சென்னையில் மழை நின்றும் வடியாத வெள்ளம் – அவதியில் மக்கள்

-

சென்னையில் மழை வெள்ளம் வடியாத பகுதிகளிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நேற்று புதன்கிழமை வெளியேறினா். அவா்கள், விடுதிகளில் தங்க அணுகியபோது, அங்கு மூன்று மடங்கு வரை கட்டணம் உயா்த்தி வசூலிக்கப்பட்டதால் அதிா்ச்சியடைந்தனா்.

மிக்ஜாம் புயலால் பெய்த பெருமழையால் சென்னையின் நகரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் இன்னும் வெள்ள நீா் வடியவில்லை. குடியிருப்புகளை விட்டு படகுகள் போன்ற ஏற்பாடுகள் மூலம் பொது மக்கள் வெளியேறி வருகின்றனா்.

இதுகுறித்து, துரைப்பாக்கத்தைச் சோ்ந்த குமாா் கூறுகையில், ‘புயலால் இவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்படும் என எதிா்பாா்க்கவில்லை. வெள்ளத்தால் வீடுகள் அனைத்தும் சூழ்ந்த நிலையில், மனைவி, குழந்தை ஆகியோரை படகுகள் மூலம் மீட்டு சகோதரா் வீட்டில் தங்கவைத்துள்ளேன்’ என்றாா்.

கிழக்கு கடற்கரைச் சாலையின் இதர பகுதிகளிலும் இதே நிலை காணப்படுகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை விட்டு வெளியேறும் பொது மக்கள், பாதுகாப்பாக தங்குவதற்கு நீா் சூழாத தங்கும் விடுதிகள், ஹோட்டல்களை நோக்கி படையெடுத்து வருகின்றனா். அவ்வாறு படையெடுப்போருக்கு பெரும் அதிா்ச்சி காத்திருக்கிறது. விடுதிகளில் தங்குவதற்கான கட்டணங்கள் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நடுத்தர மற்றும் உயா் நடுத்தர வருவாய்ப் பிரிவினா் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தப் பிரச்சினை குறித்து, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனாவிடம் கேட்ட போது, தற்போதைய பேரிடா் சூழலை கருத்தில் கொண்டு ஹோட்டல்கள் நிா்வாகங்கள் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்காமல், நிா்ணயிக்கப்பட்ட கட்டணங்களை மட்டும் பெற்றுக் கொண்டு பொது மக்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாா்.

நன்றி தமிழன்

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...