பருவநிலை மாற்ற ஆர்வலர்களின் தொடர் போராட்டங்கள் அடுத்த வார இறுதி வரை மெல்போர்னின் CBD இல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எச்சரித்துள்ளது.
காலை 07 மணி தொடக்கம் 08 மணி வரையிலும், பிற்பகல் வேளைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நேரங்களிலும் இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுவதுடன், மெதுவாக நகரும் எதிர்ப்புப் பேரணிகள் இவ்வாறு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நகரத்தில் உள்ள தொழிலாளர் கட்சி எம்பி அலுவலகங்கள் முன் தொடர் போராட்டங்களும் இதில் அடங்கும்.
வரும் சனிக்கிழமை முதல் இந்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த போராட்டங்கள் நடைபெறும் இடங்களை சாரதிகள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.