முன்னாள் விக்டோரியா பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸின் ஆட்சியில் பொதுச் சேவை மிகவும் அரசியல்மயமாக்கப்பட்டதாக மாநில ஒம்புட்ஸ்மேன் குற்றம் சாட்டியுள்ளார்.
பயனற்ற சில திட்டங்களுக்கு பொதுமக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களின் தேவைகளின் அடிப்படையில் சில திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாக தற்போதைய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு முக்கிய பரிந்துரையானது, பொது சேவை நியமனங்களுக்கான சுயாதீன தலைவர் ஒருவரை நியமிப்பது ஆகும்.