பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, பல மெல்பேர்ன் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இன்று பிலிண்டர்ஸ் நிலையம் அருகே பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்கு பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களும் வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மெல்போர்ன் நகரின் மையப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தையொட்டி, நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்தும் இவ்வாறான போராட்டங்களை நடத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், வரும் நாட்களில் அடிலெய்ட், சிட்னி மற்றும் கான்பெரா நகரங்களில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் இதுபோன்ற போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.