அவுஸ்திரேலியாவின் குடிவரவு முறையை வெளிநாடுகளில் இருந்து வரும் சர்வதேச மாணவர்கள் முக்கியத்துவம் இல்லாத பாடப்பிரிவுகளைப் படிக்கத் தவறாகப் பயன்படுத்துவதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, நாட்டிற்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நிரந்தர தீர்வு எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்டு எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் இல்லாத பாடநெறிகளைப் படிப்பதற்காக பல வெளிநாட்டு மாணவர்கள் மாணவர் வீசாவைப் பெறுவதற்கு முயற்சித்து வருவதாக பிரதமர் அல்பானீஸ் சுட்டிக்காட்டுகிறார்.
எனவே, பல்கலைக் கழகத்துக்கு கீழே உள்ள குறிப்பிட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கையை கணிசமாக குறைக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள வீட்டு நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை ஓரளவிற்கு தவிர்க்க இது உதவும் என பிரதமர் அல்பானீஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.