Cinemaநயன்தாராவை 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்காதீர்கள்!

நயன்தாராவை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்காதீர்கள்!

-

இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான அன்னபூரணி படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 1-ஆம் திகதி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா தன்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்காதீர்கள் என்று கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “திரையரங்கில் படம் பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. அதனால் முதல் நாள் காட்சியெல்லாம் பார்க்க தைரியம் இருக்காது. எப்போதும் முதல் நாள் இரவுக் காட்சி பார்ப்பேன்.

மேலும், லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீர்கள். அப்படி சொன்னாலே திட்டுகிறார்கள். நான் இன்னும் அந்த இடத்திற்கு வரவில்லையா? இல்லை பெண் என்பதால் அப்படி இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்பதை நோக்கி என் பயணம் இல்லை” என்று கூறினார்.

Latest news

வான்வெளியை மூடிய ஈரான் – 2,500 போராட்டக்காரர்கள் பலி

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருவதால், நாட்டின் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விமானப் போக்குவரத்து...

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...